Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பெரிய கோயில் அருகே ஓடும் புது ஆற்றில் அம்மன் கற்சிலை மீட்பு…

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாநிலங்கள், பிற மாவட்டங்கள் என  பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இக்கோயில் அருகே கல்லணை கால்வாய் எனப்படும் புது ஆறு ஓடுகிறது. இப்பகுதியில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில்  4 அடிக்கு மேல் அம்மன் கற்சிலை ஒன்று கிடப்பதை பார்த்து உடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை எடுத்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் அந்த சிலையை மீட்டு விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!