Skip to content

ககன்யான் திட்ட முதல்கட்ட பரிசோதனை…..ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வரும் நிலையில் 400 கிலோமீட்டர் தூரம் சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் மூன்று வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு செயல்படுத்த உள்ள நிலையில்,  அதற்கு முன்பாக மூன்று கட்ட சோதனைகளை மேற்கொள்கிறது இஸ்ரோ. அந்த வகையில் ககன்யான் சோதனை ஓட்டம் இன்று நடைபெற இருந்தது. விண்கலத்தை இன்று விண்ணுக்கு செலுத்தி மீண்டும் பூமியில் தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இதனிடையே ககன்யான் சோதனை ஓட்டம் மீண்டும் 10 மணிக்கு தொடங்கும் என இஸ்ரோ அறிவித்தது. ராக்கெட் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 10 மணிக்கு ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் தொடங்கியது. சரியாக 10 மணிக்கு ககன்யான் விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!