Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு இன்று சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு முருக பெருமானுக்கு எண்ணை காப்பு

சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!