Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆசிரியர்களுடன்…….அமைச்சர் மகேஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

திமுக தேர்தல் அறிக்கையில் ஆசிரியர் மறு தகுதி தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில்,  வரும் ஜனவரியில்  சுமார் 2 ஆயிரம் பணியிடங்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இன்று காலை 8.30 மணியளவில் டெட் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகள் சுமார் 10 க்கும் மேற்பட்டோர்  சந்தித்து பேசினர். அமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.  இதைத்தொடர்ந்து இன்று முதல் ஈரோட்டில்  தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!