Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காற்று மாசு….. டில்லியில் 2 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை

டில்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் தலைமையில்தலைமையில் சீராய்வு கூட்டம்  டில்லி செயலகத்தில் நேற்று முன் தினம் நடந்தது.  இந்த கூட்டத்தில்,டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அளவு மற்றும் அதனை தடுப்பதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்டவை பற்றி

ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இதற்கிடையில், டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை அடுத்து, 2 நாட்களுக்கு அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது என டில்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி, இன்றும், நாளையும் டில்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!