Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5 மாநில தேர்தல் அதிகாரிகள்…. சென்னையில் ஆலோசனை தொடக்கம்…

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. (1.1.2024) அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு பங்கேற்றுள்ளார். மாலை 5 மணி வரை இக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், மாநில சட்டம் ஒழுங்கு நிலை, வக்குச்சாவடிகள் தொடர்பானவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!