Skip to content

புகளுர் தனியார் சர்க்கரை ஆலையில் வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி….

கரூர் மாவட்டம்.புகளுர் தனியார் சர்க்கரை ஆலையில் வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர் பிழை திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதறகாக புகழூர் தனியார் சர்க்கரை ஆலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் கோட்டாட்சியர் ரூபினா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சர்க்கரை ஆலை

ஊழியர்களிடம் பேசிய கோட்டாட்சியர் வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் புகலூர் தாசில்தார் முருகன் மற்றும் புகலூர் கிராம நிர்வாக அலுவலர் தனபால் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!