Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டாசு சத்தத்தால் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை….. 24 மணி நேரத்திற்கு பின் வெளியேறியது

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளியையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பட்டாசுகள் வெடித்த நிலையில், நாயை பிடிப்பதற்காக வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தது. நேற்று காலை வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர். இதையடுத்துமூன்று சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒரு தானியங்கி கேமராவை பயன்படுத்தி வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் 24 மணி நேரத்திற்குப்பிறகு வீட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை தானாகவே வெளியேறியது. சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவுசெய்திருந்த நிலையில் சிறுத்தை தானாகவே வீட்டில் இருந்து வெளியேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!