Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பஸ் மோதி கவிழ்ந்த வேன்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…

சென்னையில் சமீப காலமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை சென்னை அண்ணாநகரில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் பலியான நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இந்த விபத்தில் மது போதையில் வாகனத்தை வேகமாக ஓட்டியது தெரியவந்தது. இந்நிலையில் இன்று காலை சென்னை மீனம்பாக்கம் சிக்னலில் அரசு பேருந்தும், தனியார் நிறுவன வேனும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது. வேனிலிருந்த தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், நல்வாய்ப்பாக அரசு பஸ்சில் பயணம் செய்த 40 பேரும் எந்த காயங்களுமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக தாம்பரம்- கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!