Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிரிக்கெட்….. முதல் அரையிறுதி ஆட்டம் காண வரும் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்

மும்பை வான்கடே மைதானத்தில்   நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. அதேபோல் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி இந்த முறை அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. இதனால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்த அரையிறுதி ஆட்டத்தை நேரில் காண இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் வருகிறார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுடன் டேவிட் பெக்காமும் சேர்ந்து அரையிறுதி ஆட்டத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெக்காம் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக இந்தியாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) யுனிசெப் உடன் இணைந்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து, கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துகிறது. மேலும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் இந்த ஆட்டத்தை நேரில் காண வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!