Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விழிப்புணர்வு… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

கரூர் பேருந்து நிலையத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் -2024 முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான தங்கவேல் துவக்கி வைத்தார். தொடர்ந்து பாரம்பரிய இசை கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியை அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்களுடன் கண்டுகளித்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு

துண்டறிக்கைகளை வழங்கினார். மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள தொலைதூர பேருந்துகளில் ஏறி பயணிகளுக்கு தேர்தலில் வாக்களிப்பது, வாக்காளராக பதிவு செய்வது கைபேசி செயலி அல்லது இணையவலி மூலமாக வாக்காளர் சேவைகளை பெறுவது வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல் தொடர்பான துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!