Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகள்களிடம் அத்துமீறல்.. 2வது கணவனை கொலை செய்து திருச்சி ஆற்றில் வீசிய பெண்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ரேகா என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் இறந்த நிலையில், தனது 3 மகள்களுடன் திருச்சி மாவட்டம் முசிறிக்கு கூலி வேலைக்காக வந்துள்ளார். செங்கல் சூலையில் பணியாற்றியபோது, பிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை இரண்டாவதாக ரேகா திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, ரேகாவின் மகள்களை, பிரபு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ரேகா, அரிவாள் மற்றும் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் உடலை அய்யம்பாளையம் காவிரி ஆற்றில் வீசியுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்படம்பர் மாதம் நடந்த நிலையில், ஆற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. 4 மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மகனை காணவில்லை என பிரபுவின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசாருக்கு ரேகாமீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் நடத்திய விசாரணையின் இறுதியில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!