Skip to content

மக்களவை தேர்தல் தேதி….. தேர்தல் ஆணையம் தீவிரம்

2024ம் ஆண்டு  மார்ச், ஏப்ரல் மாதங்களில் மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடைபெற உள்ளது.  தேர்தல் தேதியை  முடிவு செய்யும் பணியில் இப்போதே தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.  தமிழகத்தில்  வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் தேர்வுகள், திருவிழா குறித்த விவரங்களை மாநில அரசிடம் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.  இந்த தேதிகளை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப  வாக்குப்பதிவு தேதியை  தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அதற்கான தேதியை முடிவு செய்வதற்காககே தேர்தல் ஆணையம்  தேர்வு மற்றும் திருவிழா  தேதிகளை மாநில அரசிடம் கேட்டு உள்ளது.

அத்துடன் புதிய வாக்காளர்களுக்கு மார்ச் மாதம் இலவச வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!