Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பெண் ஜவுளி வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது….

திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சற்குரு யாசின். இவரது மனைவி அசினா பேகம் வயது (42) இவர் அந்தப் பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நியமதுல்லா. இவரது மகன் அம்ஜத் அலி (23) இவருக்கு அசீனா பேகத்தின் மகளை திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று அஜ்மத் அலி அசினாபேகத்திற்கு வீட்டிற்கு சென்று தன்னை பற்றி யாரோ தவறாக பேசியது குறித்து அவர்களிடம் கேட்டு தகராறு ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அசினா பேகத்தை அஜ்மத் அலி தாக்கி விட்டார். இச்சம்பவம் குறித்து அசினா பேகம் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜ்மத் அலியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!