Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐபிஎல் ஏலம்…… ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம்… மிட்செல் ரூ.24.75 கோடி

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது.  வரும் ஆண்டு  மார்ச் மாதம்  ஐபிஎல் போட்டி தொடங்கப்படும் என தெரிகிறது. இந்த போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான  ஐபிஎல் ஏலம் இன்று துபாயில்  நடைபெற்று வருகிறது.ஐபிஎல் வரலாற்றில்  இன்று ஒரு பெண் ஏலம்   நடத்தினார். அவரது பெயர் மல்லிகா சாகர். இதற்கு முன் இவர் பெண்கள்  ஐபிஎல் போட்டியிலும் ஏலம் நடத்தி உள்ளார். மும்பையை சேர்ந்தவர் இவர். கபடி போட்டிக்கும் பல முறை ஏலம் நடத்தி உள்ளார்.

ஏலம் தொடங்கிய உடன் முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் பவுலை 7 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் ரூ. 6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி அவரை தட்டி தூக்கியது.உலகக்கோப்பை தொடரில் அசத்திய இளம் வீரரான நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை ரூ. 1.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்,  ரூ.20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த தொகை ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.

இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் நடந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய   இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்  ரூ.24.75 கோடிக்கு ஏலம் போனார். குஜராத், கொல்கத்தா இடையே நடந்த கடும் போட்டிகளுக்கு மத்தியில் கொல்கத்தா அணி,  ஸ்டார்க்கை தன்வசப்படுத்தியது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை. கேப்டன் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு ஏலம் போன நிலையில்  சிறிது நேரத்தில் அந்த சாதனையை அதே அணியில் உள்ள இன்னொரு வீரர் முறியடித்தார்.

இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவியை ரூ. 6.40 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது.  இந்திய வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் உமேஷ் யாதவை ரூ. 5.80 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!