Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி விமானத்தில்……ரூ.35.5 லட்சம் தங்கம், லேப்டாப் கடத்தி வந்த 2 பயணி சிக்கினர்

திருச்சி விமான நிலைய  வான் நூண்ணறிவு அதிகாரிகளுக்கு கிடைத்த  ரகசிய தகவலின் அடிப்படையில்  நேற்று துபாயில் இருந்து திருச்சி வழியாக கொழும்பு செல்லும்  லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தபோது, அதில்  வந்த சந்தேகத்திற்கிடமான பயணிகளை அதிகாரிகள்  சோதனை செய்தனர். அப்போது ஒரு  ஒரு ஆண் பயணி தனது  உள்ளாடை மற்றும் பேண்டில்  பேஸ்ட் போல  மறைத்து வைத்திருந்த ஒரு பொருளை கண்டுபிடித்து அதனை சோதனை போட்டனர்.

அதில் 294 கிராம் தங்கம் இருந்தது. அது 24 காரட் தங்கம். இதன் மதிப்பு ரூ.31.09 லட்சம் . அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுபோல கொழும்பில் இருந்து  திருச்சி வந்த   லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  சில பயணிகளிடம் சோதனை செய்தபோது ஒரு ஆண் பயணி  3 ஐபோன்,  3 உபயோகிக்கப்பட்ட  லேப்டாப்,  10 கைக்கடிகாரங்கள் கடத்தி வந்தார். அதன் மதிப்பு ரூ.4.45 லட்சம்.  அதையும் அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். 2 பயணிகளிடமும் அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!