Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக எம்.எல்.ஏக்கள் ரூ.1.27 கோடி வெள்ள நிவாரண நிதி…. முதல்வரிடம் வழங்கினர்

வங்க கடலில் உருவான  மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 3, மற்றும் 4ம் தேதிகளில்   வட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டியது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் 4 மாவட்ட மக்களும்  பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தாராளமாக உதவும்படி  தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.  அதனை ஏற்று  தொழிலதிபர்கள், திரையுலகினர் பலர் நிதி உதவி வழங்கினர்.

திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள்  தங்கள் ஒருமாத ஊதியத்தையும் மிக்ஜாம் புயல்   நிவாரண நிதிக்கு அளிக்கும்படி முதல்வர் கேட்டுக்கொண்டாா். அதை ஏற்று இன்று  அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்களின் 1 மாத ஊதியமான  ரூ.1 கோடியே 27 லட்சத்து 4 , 500க்கான காசோலையை  துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி,  அரசு தலைமைக்கொறடா  கோவி. செழியன் ஆகியோர்  தலைமை செயலகத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலினிடம் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!