Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன்….

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள சேலம்கேம்ப் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (50). இவர் பெயிண்டர். இவரது 2வது மனைவி தமிழ்ச்செல்வி (37). இருவருக்கும் 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்ச்செல்விக்கு அவரது உறவினர் அசோக்குமார் என்பவருடன் தகாத உறவு இருந்ததாக கடந்த 24ஆம் தேதி கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த

murdermurder

ராமகிருஷ்ணன் வீட்டில் பெயின்ட்டில் கலக்க வைத்திருந்த தின்னரை எடுத்து தமிழ்ச்செல்வி மீது ஊற்றி தீ பற்ற வைத்தார்.  பலத்த தீ  காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்ச்செல்வி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கருமலைக் கூடல் காவல் ஆய்வாளர் குமரன் வழக்கு பதிவு செய்து பெயிண்டர் ராமகிருஷ்ணனை கைது செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!