Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அணிவகுத்த பழங்கால கார்கள்… கோவை மக்கள் ஆச்சர்யம்……

கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில், பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கண்காட்சியில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்களை காட்சிப்படுத்தினர். சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1995ம் ஆண்டு வரையுள்ள 50க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதில் பழைய மாடல் பென்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர், வோக்ஸ்வேகன், பழைய ஜீப் உள்ளிட்ட கார்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வலம் வந்தன.
50க்கும் மேற்பட்ட பழங்கால கார்களை கண்டு மக்கள் ஆச்சரியம்
50க்கும் மேற்பட்ட பழங்கால கார்களை கண்டு மக்கள் ஆச்சரியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!