Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்…

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி மற்றும் மாநகராட்சி மண்டல

குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவை ஒட்டி மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கோலப்போட்டி, ஸ்லோ சைக்கிள் ரேஸ், இசை நாற்காலி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!