Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே மனைவி-மகளிடம் தகராறு செய்த தந்தை தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் மனைவி, மகளிடம் தகராறு செய்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுகாம்பூர் செந்தாமரைக்கண் படையாட்சி தெருவைச் சேர்ந்தவர் 52 வயதான கேசவன்.இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இவர் மது போதையில் மனைவி மற்றும் மகளிடம் தகறாறு செய்த்தாக கூறப்படுகிறது. நேற்று மதுபோதையில் இருந்த கேசவன் மகளிடம் தகராறு செய்துள்ளார். இது குறித்து அவரது மகள் குழந்தைகள் நல உதவி அமைப்பான 1098 க்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து குழந்தைகள் நல உதவி அமைப்பு நிர்வாகிகள் வீட்டிற்கு சென்று விசாரணை செய்துள்ளனர்.இதனால் மன உளைச்சல் அடைந்த கேசவன் அறைக்குள் சென்று கதவை சாத்திவிட்டு மனைவியின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!