Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் போராட்டத்தில் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் சுமார் 50க்கும்

மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய மேலாடைகளை களைந்து கோவனத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சமூக இனத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!