Skip to content

ஜெயங்கொண்டம்….மத்திய அரசை கண்டித்து அனைத்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பாக விபத்து ஏற்படுத்தி நிற்காமல் செல்லும் வழக்கில் ஓட்டுநர்களுக்கு பத்தாண்டு சிறை தண்டனை 7 லட்சம் அபராதம் போடும் கடுமையான சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் ஆன்லைன் அபராதம் சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி சாலை

போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சந்தானம் சி பி எம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மாவட்ட துணை தலைவர் சிற்றம்பலம் மாவட்ட செயலாளர் துரைசாமி மாவட்ட தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினர் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மற்றும் நிர்வாகிகள் மெய்யப்பன் ராஜாமணி, சிவபெருமாள், மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியல். சி ஐ டி யு மாவட்ட குழு உறுப்பினர். கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!