Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த வண்ணம் இருந்தது.

ரகசிய தகவலின் படி அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  செல்வராஜ்  உத்தரவின் பேரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான  நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை மாவட்ட போலீசார் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் கீழத் தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு அருண் என்கிற மகாலிங்கம்  கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அருணை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 40 கிராம் எடையுள்ள கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.

மேலும் அருண் என்கின்ற மகாலிங்கத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!