Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை வாலிபர் கைது

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவா் அருண்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு   இளம் பெண்ணிடம்  இன்ஸ்டா மூலம் பழகி வந்தார். நாளடைவில் காதல் மலர்ந்தது. உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என  அருண்குமார் உறுதி அளிக்க,  தினந்தோறும்  வீடியோ கால் மூலமாக  மணிக்கணக்கி்ல் உரையாடினர்.

ஒரு நாள் அருண்குமார் தன் காதலியை  நிர்வாண கோலத்தில்  பேசும்படி  வற்புறுத்தினார். அவர் தானே நம் கணவராக போகிறவர் என்று நம்பிய  காதலி  பிறந்த மேனியாக  வீடியோ காலில் தோன்றினார். அதை அருண்குமார் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.  பின்னர் அவர் அந்த  பதிவை காட்டி, அடுத்த கட்டத்துக்கு   அந்த பெண்ணை அழைத்தார்.

அதாவது  செக்ஸ்க்கு  தனிமையில் அழைத்தார். அதற்கு அந்த பெண் மறுத்ததால் நிர்வாண வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவேன். உனக்கு 2 நாள் டைம் தருகிறேன். அதற்குள் சம்மதிக்காவிட்டால்  அனைவரும் பார்க்கும்படி உன் வீடியோ வெளிவந்து விடும் என மிரட்டினார். இதனால் பயந்துபோன அந்த பெண்  போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். இதுபோல அருண்குமார் எத்தனை பெண்களிடம்  விளையாடி உள்ளார் என்றும் விசாரித்து வருகிறார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!