Skip to content

தஞ்சையில் உளுந்து அறுவடை … விவசாயிகள் மும்முரம்..

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மேலும் உளுந்து, பயறு, கடலையும் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா, தாளடி சாகுபடியும் முடிந்து விட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையில் உளுந்து, எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

புரதச்சத்து மிகுந்த உளுந்து, குறுகிய காலத்தில், மிகக்குறைந்த செலவில் விவசாயிகளுக்கு அதிக லாபத்தை அளிக்கும் பயிராக உள்ளது. அந்த வகையில் தஞ்சை அருகே கல்விராயன்பேட்டையில் விவசாயிகள் மேற்கொண்ட உளுந்து பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட உளுந்து செடிகளை விவசாயிகள் சாலையில் காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!