Skip to content

மக்களவை தேர்தல்….. அதிமுக 2 நாள் நேர்காணல்….. எடப்பாடி அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதி்களில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு  விருப்ப மனு அளித்துள்ள அதிமுகவினரிடம்  வரும்10, 11ம் தேதிகளில்  அதிமுக தலைமைக்கழகமான எம்.ஜி.ஆர் மாளிகையில்  நேர்காணல் நடைபெறுகிறது.

நேர்காணல் நடைபெறும் நேரமும், தொகுதிகள் விவரமும் வருமாறு:

10ம் தேதி காலை 9.30 மணி:

திருவள்ளூர்(தனி), வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை,  திருப்பெரும்புதூர்,  காஞ்சிபுரம்(தனி), அரக்கோணம்,  வேலூர், கிருஷ்ணகிரி,  தர்மபுரி.

10ம் தேதி  பிற்கல் 2 மணி:- திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி(தனி), கோவை,

11ம் தேதி காலை 9.30 மணி:   பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம்(தனி), மயிலாடுதுறை, நாகை(தனி), தஞ்சை

பிற்பகல் 2 மணி:   சிவகங்கை,  மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி(தனி), திருநெல்வேலி, கன்னியாகுமரி,  புதுச்சேரி.

நேர்காணலுக்கு வருகிறவர்கள் விருப்பமனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன்  மேற்கண்ட கால  அட்டவணைப்படி தலைமைக்கழகத்திற்கு வரும்படி  கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு  அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!