Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை மற்றும் திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு..

2011ம் ஆண்டு இவர் எழுதிய முதல் நாவலான “காவல் கோட்டம்” நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சி தமிழ் – ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரீகம், சமயம் கடந்த தமிழ், கதைகளின் கதை, உட்பட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர், மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சார்ந்தவர். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி சிபிஎம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர். சச்சிதானந்தம், அக்கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர். 53 வயது ஆகும் இவர் பி.எஸ்.சி. பட்டதாரி. 37 ஆண்டுகளாக சிபிஎம்மில் இயங்கி வருகிறார். 1987ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்ட துணை செயலாளராகவும், திண்டுக்கல் நகர தலைவராகவும் பணியாற்றியவர். 1992ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து 1994-2002 வரை மாவட்ட செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில துணை செயலாளராக பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!