Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கு….. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

டில்லியில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அதிகாரிகள் டில்லி முன்னாள் துணை முதன் மந்திரி கலால்துறை மந்திரியுமான மணிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த மதுபான கொள்கை முறைகேட்டில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, வழக்கில் இன்று நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ஏற்று கெஜ்ரிவால் இன்று நேரில் ஆஜரானர். கெஜ்ரிவால் ஆஜரானதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!