Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் உள்ள தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஸ்டார் பிராண்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சீர்காழி போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதை கண்டித்தும் கைது செய்தவர்களை விடுவிக்க கோரியும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!