Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்…. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்தனர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா  கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள்,  சிறப்பு அலங்காரத்தில் தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து  காலை 8 .45 மணிக்கு தேரோட்டம்  தொடங்கியது. .ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.  சித்திரை வீதிகளில்  தேர் வலம் வருகிறது.

தேரோட்ட விழாவையொட்டி ஸ்ரீரங்கம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  தேரோடும் வீதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!