Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் அதிமுக- நாதக வேட்பாளர்கள் திடீர் சந்திப்பு….

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம், திருவானைக்கோவிலில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து இன்று சிந்தாமணி மலைக்கோட்டை தாராநல்லூர் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் ரோட்டு கடை ஒன்றில் தோசை

ஊற்றி பிரசாரம் செய்தார். அப்போது எதிரே திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவும், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேசும் திருச்சி, ஆண்டாள் வீதியில் எதிர் எதிரே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!