சிதம்பரம்(தனி) பாராளுமன்றத் தொகுதி, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மக்களவை தேர்தல் 2024 வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM), வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரம் (VVPAT) பயன்படுத்துவது மற்றும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெறுவதையொட்டி, 27.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, 149.அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM), வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்தரம் (VVPAT) பயன்படுத்துவது மற்றும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த இரண்டாம் கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு, அறிவுரைகளை வழங்கினார்.
இதேபோன்று 150.ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் இரண்டாம் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் இப்பயிற்சியானது அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149.அரியலூர் மற்றும் 150.ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 596 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 2909 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் (20 சதவீத இருப்புடன் சேர்த்து) காலை 9 மணி முதல் 1 மணிவரை மற்றும் பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை இரண்டு வேளைகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில், அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுமதி, வட்டாட்சியர் (அரியலூர்) ஆனந்தவேல், வட்டாட்சியர் (தேர்தல்) வேல்முருகன், மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.