Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரேசன் கடையில் ரூ.1000 வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளலாம்….

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கல் தொகுப்பு பெரும்பாலானவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன. இதுவரையில் வாங்காமல் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். ரூ.1000 ரொக்கம் கொடுப்பது நிறுத்துவது குறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் தொடர்ந்து வினியோகித்து கொண்டு இருக்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!