Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் மீது வழக்கு…

துறையூரில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் படுத்தபடி அசுர வேகத்தில் வாலிபர் ஒருவர் சென்ற வீடியோ வைரலானது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புலிவலம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் நிகேஷ் (19) என்பது தெரியவந்தது. இவர் துறையூரில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் படுத்தபடி அசுர வேகத்தில் வாகனத்தை ஒட்டி சென்று சாலையில் சென்ற வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து புலிவலம் போலீசார்  நிகேஷ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!