ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவெந்துலா அருகே 30 அடி பள்ளத்தாக்கில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் 20 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். சத்ய சாய் மாவட்டம் கதிரியில் இருந்து கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவுக்கு 30 பயணிகளுடன் ஆந்திர அரசு பேருந்து சென்றது. எதிர் திசையில் வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய 20 பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக புலிவெந்துலா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

