‘பெண்களுக்கு ஒரு கும்பிடு’ – நடிகர் நானி ஓபன் டாக்! “முடியை நீளமாக வளர்த்து பராமரிப்பது ரொம்ப கஷ்டம் என்று நடிகர் நானி ஓபனாக தெரிவித்துள்ளார். ‘பாரடைஸ்’ படத்தின்போது 160 நாட்கள் அப்படி இருந்ததே எனக்கு போதும் என்றாகிவிட்டது! ஆனால் பெண்கள் எப்படிதான் கூந்தலை பராமரிக்கிறார்களோ? அவர்களுக்கு கும்பிடுபோடலாம். ஹீரோ சடை பின்னி இருந்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என சந்தேகமாக இருந்தது. ஆனால் தைரியமாக நடித்தேன். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்!”
