Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபரை அரிவாளால் வெட்டி படுகொலை-தஞ்சையில் கொடூர சம்பவம்

தஞ்சாவூர் புதுப்பட்டினம் ஊராட்சி பாரதிதாசன் நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் சசிக்குமார் (21). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். ஆட்டோவை விற்று விட்டு தற்போது டைல்ஸ் ஒட்டும் பணிக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் விளார் ஊராட்சிக்குட்ட கலைஞர் நகர் பகுதியில் அரிவாளால் பலமுறை வெட்டப்பட்டு தலை சிதைந்த நிலையில் சசிகுமார் இறந்து கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா போலீசார் சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சசிக்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் அறிந்து வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை அடையாளம் காண்பித்து கதறி அழுதனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சசிக்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன? காதல் பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சம்பவ பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!