Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆடி அமாவாசை… மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

ஆடி அமாவாசையை முன்னிட்டு மாயனூர் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு வரிசையாக அமர்ந்து தர்ப்பணம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை,தை அமாவாசை, மாகாளய அமாவாசை ஆகிய தினங்களில் வாழ்ந்து மறைந்து இறந்து போன தங்களது முன்னோர் நினைவாக புனித நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்கள்

நினைவாக திதி கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கரூர் மாவட்டம் காவேரி ஆற்றங்கரையை ஒட்டிய தளவாபாளையம், நெரூர், மாயனூர், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்டம், மாயனூர் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் புனித நீராடிய பின்னர் வாழை இலையில் பழம், வெற்றிலை பாக்கு, எள்ளு, அரிசி ஆகியவற்றை கொண்டு ஏராளமானோர் வரிசையாக அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!