Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூர்….. லாரி மோதி பைனான்ஸ் மேலாளர் பலி

பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா மகன் சுகுமார் இவர் பெரம்பலூர் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு பெரம்பலூரில் இருந்து சிறுகுடல் கிராமத்திற்கு அரியலூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்தார்.

க. இறையூர் பிரிவு சாலை அருகில் டிப்பர் லாரியின் ஓட்டுநர் நல்லசாமி என்பவர் பெரம்பலூர் நோக்கி வந்த போது எதிர்பாராத விதமாக லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர்  மோதியது. இதில்  சுகுமார்  படுகாயம்  அடைந்து  சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தை அறிந்த சிறுகுடல் பகுதியைச் சேர்ந்த சுகுமாரின் உறவினர்கள் டிப்பர் லாரி கண்ணாடியை  உடைத்து சேதப்படுத்தினர். விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!