Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனியார் பஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து… 20 பேர் காயம்

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர், செங்கல்பட்டு பகுதி அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை பணியின்போது, செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் அரசு பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தார். இப்பேருந்து பெரும்புதூர்-ஒரகடம் நெடுஞ்சாலை வழியாக ஒரகடம் அருகே வடக்குப்பட்டு பகுதியில் சென்றபோது, தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற தனியார் பேருந்து திடீரென சாலையை கடந்துள்ளது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், திடீரென தனியார் பேருந்தின்மீது வேகமாக மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் அரசு பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் தனியார் பேருந்தில் வந்த தொழிற்சாலை ஊழியர்களில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்ததும் ஒரகடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு 2 பேருந்துகளின் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு, பெரும்புதூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!