Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி பள்ளி விழா…….பந்தல் சரிந்து விழுந்து 10 மாணவர்கள் காயம்

திருச்சி கருமண்டபத்தில் உள்ள   ஒரு தனியார் பள்ளியில்  இன்று ஒரு விழா நடந்தது. பந்தலில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர்.  விழாவிற்காக சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. பலத்த காற்று காரணமாக   அந்த பந்தல்  திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில்   மாணவ, மாணவிகள் இடிபாபடுகளில் சிக்கினர்.  உடனடியாக ஆசிரியர்கள்  அந்த இடிபாடுகளை அகற்றி மாணவர்களை மீட்டனர்.  இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட  மாணவர்கள் காயம்  அடைந்தனர்.

இந்த விழா  ஏற்பாடுகள் சரியான பாதுகாப்பு இல்லாமல் செய்யப்பட்டதால்  இந்த விபத்து நடந்துள்ளதாக பெற்றோர்கள்  கூறினர். காயம்  அடைந்த மாணவ மாணவிகளுக்க  உடனடியாக  பள்ளியிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!