திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திடீரென மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
