Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்

நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, தனது மனைவியின் மருத்துவச் சிகிச்சைக்காக முதல்-அமைச்சர் விஜய்யிடம் உதவி கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். முத்துக்காளையின் மனைவிக்கு (47) சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட கடுமையான தொற்று பாதிப்பால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, கடந்த 17 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது மனைவிக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை கிடைக்க முதல்வர் விஜய் உதவ வேண்டும் என முத்துக்காளை வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்கள் மூலம் முதல்வர் விஜய்யின் கவனத்திற்குச் சென்ற நிலையில், அமைச்சர் ராஜ்மோகனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி, அவருக்கு தேவையான அனைத்து அதிநவீன உயர்தர மருத்துவச் சிகிச்சைகளையும் தங்குதடையின்றி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மனைவியின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர் முத்துக்காளை

error: Content is protected !!