சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே மற்றும் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தீப்பற்றி எரியும் விமானத்தின் முன் கையில் துப்பாக்கியுடனும் வாயில் ரோஜா மலருடனும் கம்பீரமாக நிற்கும் தனது போஸ்டரை பகிர்ந்த ஷாருக்கான், “நான் கொலைகாரன் அல்ல… காதலன்!” என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். இத்திரைப்படம், வரும் டிச.24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
கிங்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட நடிகர் ஷாருக்கான்
