திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் சாமி தரிசனம்….
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நடிகர்கள்,

இயக்குனர்கள் தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகை பிரபல திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார், முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கிய அவர் தொடர்ந்து உண்ணாமலையம்மன் உடனுறை அண்ணாமலையாரை வழிபாடு செய்தார்.
பின்னர் நவகிரகங்களையும் வழிபட்டு கோவில் கொடி மரம் முன்பு சிறப்பு வழிபாடு செய்தார், அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் திருக்கோவிலில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது, சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த அவருடன் பக்தர்கள் பொதுமக்கள் புகைப்படம், மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
