Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் கொள்ளை….

இந்தி திரையுலகில் ஜொலித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை ஜுகு பகுதியில் அமைந்து உள்ளது. இவரது பிறந்த நாள் கடந்த வாரம் 8-ந்தேதி  கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன், பிறந்த நாளை கொண்டாட இத்தாலி நாட்டுக்கு அவர் சுற்றுலா சென்றார். இந்த நிலையில், கடந்த வாரம் அவரது வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. இதுபற்றிய புகாரின் பேரில் ஜுகு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!