அதிமுகவில் ராஜ்யசபா சீட்டு யார் யாருக்கு? பரபரப்பு தகவல்

370
Spread the love

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா, டிகே.ரங்கராஜன், ஏ.கே.செல்வராஜ், திருச்சி சிவா, விஜிலா சத்யானந்த், எஸ்.முத்துகருப்பன் ஆகியோரின் பதவி காலம் வரும் ஏப்ரல் 3ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. தற்போதைய நிலையில் எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தலா 3 எம்பிக்களை ராஜ்யசபாவுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்க முடியும். கடந்த முறை ராஜ்யசபா தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களில் இருந்து தான் ஜெயலலிதா 3 எம்பிக்களை தேர்வு செய்தார். தற்போது நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த யாரும் அமைச்சராக இல்லை. எனவே இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினருக்கு எம்பி பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அந்த பகுதியில் இருந்து எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த முறை பாமகவுக்கு வழங்கியது போல் இந்த முறை தங்களுக்கு எம்பி சீட் வழங்க வேண்டும் என்று தேமுதிகவும் ஒரு பக்கம் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. எசி சண்முகம் தனக்கு சீட்டு வேண்டும் என பாஜ மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்.. இந்த நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலா ஒன்று என பேசி முடித்து விட்டதாகவும் மீதம் உள்ள 1 சீட்டு கூட்டணி கட்சிக்கு என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

LEAVE A REPLY