Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அகவிலைப்படி உயர்வு….

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி ஏற்கெனவே 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, இன்று முதல் 38 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இந்த உயர்வால், ஆண்டுக்கு 2 ஆயிரத்து 359 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் அரசுக்கு கூடுதல் செலவாகும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழு பரிந்துரையை பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!