மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்த தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஆகியோர், AI டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். பிரபலங்களின் அனுமதியின்றி பயன்படுத்தி போலி வீடியோக்கள் உருவாக்கப்படுவதால் தனிப்பட்ட கௌரவத்திற்கும் பெண்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். இக்கோரிக்கையைக் கேட்டறிந்த அமித் ஷா, இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்துள்ளார்.
AI டீப்ஃபேக் பாதிப்பு: அமித் ஷாவிடம் சிரஞ்சீவி, ராம் சரண் புகார்
